மகனுக்கு ஜாமீன் கிடைக்காததால் மன உளைச்சலில் ஷாருக்கான்!

போதை பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யனின் ஜாமீன் மனுவை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்து வைத்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 2ஆம் திகதி சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டபோது போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கிய நிலையில் 3ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட மகனை வெளியே கொண்டுவருவதற்கு ஷாருக்கான் தற்போது மூன்றாவதாக முயற்சி செய்துள்ளார். ஆர்யன் சிறையில் கொடுக்கும் உணவினை சாப்பிட மறுப்பதாகவும், உள்ளே இருக்கும் கேன்டீனில் பிஸ்கெட் மற்றும் தண்ணீர் மட்டும் சாப்பிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற நண்பர்களும் சாப்பிட மறுத்து வருகின்றனர். ஷாருக்கான் வீட்டிலிருந்து மகனுக்கு சாப்பாடு கொடுக்க அனுமதி இல்லாத நிலையில், நீதிமன்றம் அனுமதித்தால் வீட்டிலிருந்து சாப்பாடு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த ஜாமீன் மனு, ஷாருக்கான் வழக்கறிஞர் ஆர்யனிடம் போதைப்பொருள் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என்றும் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என்றும் வாதாடியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் வாதிட்ட போது தற்போது வழக்கு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படாத இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஆரியன்கான் உள்பட 8 பேரின் ஜாமீன் மனு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மகனுக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் ஷாருக்கான் மிகவும் மனஉளைச்சலில் காணப்படுகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *