இரண்டு பெண்ணுறுப்பு 16 வயதில் தெரிந்த உண்மை! பகிர்ந்த இளம் பெண்!

அவுஸ்திரேலியா இரண்டு பெண்ணுறுப்புடன் பிறந்த பெண் ஒருவர் அதை தன்னுடைய 16 வயதிலே தெரிந்து கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Hunter Valley-ஐ சேர்ந்தவர் Tee Bartlett. தற்போது 24 வயதாகும் இவர் பிறக்கும் போதே இரண்டு பெண் உறுப்புடன் பிறந்துள்ளார்.

இதை சாதரணமாக எடுத்துக் கொண்ட அவர் எல்லா பெண்களுக்கும் இது போன்று தான் இருக்கும் என நினைத்துள்ளார்.

அதே போன்று ஒவ்வொரு மாதத்தின் மாதவிடாயின் போது இரண்டு Tampon-களை பயன்படுத்துவதும் சாதரணமான ஒன்றே என நினைத்துள்ளார்.

ஆனால், அவர் தன்னுடைய 16 வயதில் தான் இதைப் பற்றிய உண்மையையே தெரிந்து கொண்டுள்ளார்.

அவர் தன் தாயிடம் இதைப் பற்றி கூறி, நான் எந்த ஒன்றில் Tampon-ஐ வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே அவர் தாய்க்கு உண்மை தெரியவர, மருத்துவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இறுதியாக vaginal septum இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் சமூக ஊடகங்களில் தன்னுடைய அனுபவங்களை  பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ஒரு நாள் என்னுடைய நண்பர் மற்றும் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த போது, நான் அவரிடம் இது குறித்து கேட்டேன். உடனே என் அம்மா இரண்டு கிடையாது, ஒன்று தான் என்று கூறினார்.

நாங்கள் சிறிது நேரம் வாதிட்டோம். அதன் பின் அம்மா உடனடியாக மருத்துவரை சந்திக்கும் படி கூறினார். அப்போது தான் இரண்டு இருக்க கூடாது என்பது தெரியவந்தது.

இது என்னை ஒரு பைத்தியம் பிடிக்க வைப்பது போல் உணர வைத்தது. இரண்டு மருத்துவர்களை சந்தித்து, அதன் பின் மூன்றாவது ஒரு மகளிர் மருத்துவ நிபுணரின் மூலம், இரண்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இது இப்போது பிரச்சனையாக இல்லையென்றாலும், கணவனுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, அல்லது பிரசவத்தின் போது, பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *