பிரபல இலங்கைப் பாடகியை அறிமுகம் செய்யும் ஹரிஸ் ஜெயராஜ்!

சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கு தெரிந்த செய்தி தான். அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி -ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர்.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்காக சமீபத்தில் மிகவும் பிரபலமாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஆல்பம் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.

டிக் டாக்கில் கலக்கும் எமி ஜாக்சன் மகன்!
சில தினங்களுக்கு முன்பு அந்தப் பாடலின் ரெக்கார்டிங் மும்பையில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ், யோஹனி மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. இதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாடகி யோஹனி சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள். சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து தமிழில் பாட வைத்திருப்பதால் ஈழத் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *