சொத்துக்களை இழந்து 17 ஆண்டுகள் காருடன் காட்டில் வாழ்ந்த மனிதன்!

சொத்துக்களை இழந்த முதியவர் ஒருவர் தனது காருடன் 17 வருடங்களாக காட்டுக்குள் வாழ்ந்துள்ள ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் சுல்லியா தாலுகாவின் அரந்தோடு அருகே அடலே மற்றும் நெக்கரே கிராமங்களுக்க இடையே அமைந்துள்ள தட்சினா என்ற காட்டில் 56 வயது முதியவர் 17 ஆண்டுகளாக தனது காருடன் வசித்து வந்துள்ளார்.

இவர் ஒரு காலத்தில் நெக்ரல் கெம்ராஜே கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலங்களுடன் வசதியாக வாழ்ந்த நிலையில், கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ 40 ஆயிரம் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய காரை தவிர அனைத்தையும் வங்கி ஜப்தி செய்ததோடு, நிலத்தினையும் ஏலத்தில் விட்டு இவரை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தது.

பின்பு வீட்டை விட்டு வெளியேறிய சந்திரசேகர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக தன்னுடைய காருடன் அடர்ந்த வனத்திற்கு பயணித்ததோடு, 17 ஆணடுகள் வாழ்ந்தும் உள்ளார்.

கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களில், அவர் காடுகளில் இருந்து மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளை நெசவு செய்து, அருகிலுள்ள கிராமக் கடையில் விற்று அரிசி மற்றும் சர்க்கரையை வாங்கி இருக்கிறார். ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு, அவர் காட்டுப்பழங்களை மட்டுமே உண்டு உயிர் பிழைத்துள்ளார்.

மேலும் அரந்தோட கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவரின் லட்சம், இழந்து போன தனது சொத்துக்களை மீட்பதுதான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *