ஸ்மார்ட் வாட்சையே மிஞ்சிய உலகின் முதல் குளியல் ஸ்மார்ட் மேட் அறிமுகம்!

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலவிதமான சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதில் சில சாதனங்கள் மட்டும் தான் மனிதனின் தேவையை பூர்த்தி செய்கின்றது.

அந்த வகையில், நாம் இப்பொழுது பார்க்கப்போகின்ற சாதனம் தான், எலெக்ட்ரிக் ஸ்மார்ட் பாத் மேட் (Smart Bath Mat) இந்த சாதனமானது ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட உடல் சார்ந்த விஷயங்களை பற்றி அறிந்துகொள்ள இந்த சாதனம் செயல்படுகிறது.

மேலும், இந்த மேட் ஒரு ஆப்பைக்கொண்டு இதை இயக்கலாம். ஒருவரின் உடல் எடை, இரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் அளவு, மற்றும் முக்கியமாக காலடியின் finger print-யை அடையாளப்படுத்தி காட்டுகிறது.

ஒருவர் அன்றாடம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை சார்ந்து இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனத்தை, பாரிஸை சேர்ந்த நிறுவனமான Baracoda Daily Healthtech வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் மேட் ஆனது ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தி அவர்களின் செயல்பாட்டை ஊக்குவிக்க இந்த மேட் பக்க உதவியாக உள்ளது. இந்த மிதியடியை வழக்கமான ஒரு மிதியடியாகவே பயன்படுத்தலாம்.

குளித்த பின்பு ஒருவரின் காலை உணர வைக்க முடியுமாம். பல அம்சங்களை கொண்டு பல எதிர்ப்பார்ப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார் மேட் ஆனது, வாங்க விரும்பினால், இதன் அறிமுக விலையில் , USD 229 டொலர், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்னர், வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்க டொலரில் 399-ம், விலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகம் முழுவதும் கிடைக்கும் என அந்நிறுவனர் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *