லொட்டரியில் கிடைத்த 260 கோடி ரூபா பணம் தவறான பழக்கத்தால் நடுரோட்டுக்கு வந்த இளைஞன்!

பிரித்தானியாவில் லொட்டரியில் £9.7 மில்லியன் பரிசை வென்ற நபர் தனது தவறான பழக்கத்தால் அனைத்து பணத்தையும் இழந்து வசிக்கும் வீட்டை பறிகொடுத்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Norfolk-ஐ சேர்ந்தவர் மிக்கி கரோல் (38). இவருக்கு கடந்த 2002ஆம் ஆண்டு 19 வயது இருக்கும் போது லொட்டரியில் £9.7 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ2,64,35,30,070.04) பரிசு விழுந்தது

அந்த சமயத்தில் சாண்ட்ரா ஐகன் என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் மிக்கிக்கு ஆகியிருந்தது. அந்த இளம் வயதில் இவ்வளவு பணம் கையில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகளவு போதை மருந்துகளை பயன்படுத்துவது, பெண்களுடன் தவறான உறவில் ஈடுபடுவது, பார்டிக்கு போவது என அனைத்து வித தீய பழக்கங்களுக்கும் அடிமையானர் மிக்கி.

பின்னர் சாண்ட்ராவுடன் அவருக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து தவறான பாதையில் மிக்கி சென்றதால் கடந்த 2008ல் அவரை சாண்ட்ரா பிரிந்தார். பின்னரும் முழு நேர போதைக்கு அடிமையானதால் தன்னுடைய பணம் மொத்தத்தையும் இழந்தார் மிக்கி, வசித்து வந்த பிரம்மாண்டமான வீட்டையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்.

மேலும் செய்த தவறுகளுக்காக பலமுறை சிறைக்கும் சென்று வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இனியும் இப்படி இருந்தால் இறந்துவிடுவோம் என எண்ணி திருந்தினார் மிக்கி.

இதையடுத்து சமீபத்தில் சாண்ட்ரா மீண்டும் மிக்கியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்த மிக்கி தற்போது நிலக்கரி விநியோகம் மற்றும் மரவேலைகளை செய்கிறார்.

இதோடு பிஸ்கட் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார், அதாவது விடுமுறையே இல்லாமல் வாரம் ஏழு நாளும் உழைக்கிறார். அவர் கூறுகையில், நான் இப்போது சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். என் முன்னாள் மனைவியையே மீண்டும் திருமணம் செய்து கொண்டது என் வாழ்வில் மகிழ்ச்சியான விடயமாகும்.

என்னிடம் பழைய மாதிரி நிறைய பணம் இருந்தால் இந்நேரம் உயிரிழந்திருப்பேன். ஏனெனில் என் போதை பழக்கம் தொடர்ந்திருக்கும் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *