மதுபான சாலைக்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதை அமைத்த அரச குடும்பம்!

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெதின் அரண்மனையிலிருந்து, பார் ஒன்றிற்குச்  செல்வதற்காக ரகசிய சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாக பிரபல ஊடகமான டெய்லி மெயிலின் (Daily Mail) ஆசிரியர் வெளியிட்டுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ” மகாராணியாரின் பேத்தியான, Eugenie இளவரசியின் கணவர், Jack Brooksbank ஐ அண்மையில் சந்தித்தேன்.

அப்போது, மகாராணியார் லண்டனில் இருக்கும் பிரபல பார் ஒன்றுக்குச் செல்வதற்காக ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை வைத்திருந்நதார் எனவும், தற்போது வரை அதனை தான் பயன்படுத்தியது இல்லை என்றும் ஒரு தடவையாவது  அதன் மூலம் பாருக்குச் செல்ல விரும்புவதாகவும் என்னிடம் கூறினார் ” என்றார்.

இந்நிலையில் அரச  குடும்பத்தின் ரகசியத்தை வெளியில் தெரியப்படுத்தியமைக்காக ஜக்கை  பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *