பிளாஸ்டிக் போதல்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்!

மிகவும் அழகாக, பல வடிவங்களில், கைக்கு அடக்கமாக பல அளவுகளில், மலிவான விலைகளில் கிடைப்பதனால், அழகின் மீது ஈடுபாடு கொண்ட நம்மவர்களால் பிளாஸ்டிக் போதல்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால், நீங்கள் தவிர்த்தாக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். பிளாஸ்டிக் பாட்டில்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்தையும் நாம் அதன் கடை நிலையிலோ அல்ல அபாயத்தின் அருகாமையில் இருக்கையிலோ தான், அதிலிருந்து பாதுகாக்க என்ன வழி இருக்கிறது என்று யோசிக்கவே ஆரம்பிப்போம்.

ஆனால், இந்த விஷயத்தில் ஏற்கனவே நாம் கடை நிலையில் தான் இருக்கிறோம். பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என அறிந்திருப்போம். ஆனால், இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளும் ஏற்படலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம்! தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி விவரமாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

பைசெப்பீனால் ஏ (bisphenol A, or BPA)

இந்த இரசாயனம் நாம் பயன்படுத்தும் அனைத்து வகையிலான பிளாஸ்டிக் பொருட்களிலும், எலக்ட்ரானிக் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் உணவு எடுத்து செல்லும் டப்பாக்களில் இருந்து தண்ணீர் பருகும் பாட்டில்கள் வரை அனைத்திலும் இதன் கலப்பு இருக்கிறது. இந்த இரசாயனம் தான் நம் உடலுக்கு கெடுதல்களை விளைக்கிறது என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உடல் செயலியல் பிரச்சனைகள்

அமெரிக்காவின் ஒரு ஆய்வகம் பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பைசெப்ஃபீனால் ஏ என்னும் நச்சு பொருளினால் மனிதர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றும் ஹார்மோன் பாதிப்புகள் ஏற்பட வெகுவாக பாதிப்பு இருக்கிறது. இதை பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என 2008 ஆம் ஆண்டே கூறியிருக்கின்றனர். ஆயினும் 90% பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளில் இதன் கலப்பு இருந்து வருகிறது.

புற்றுநோய்

பைசெப்ஃபீனால் ஏ நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் எளிதாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு இதன் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காண
உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி இரண்டுமே வித்தியாசமானது என்பது ? அதைத் தடுப்பது எப்படி?
உங்களுக்கு தெரியுமா பெண்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவதின் அறிவியல் உண்மை !!
தெரிஞ்சிக்கங்க… தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
இதய நோய் பதிப்புகள்

கடந்த ஆண்டு 15 வயதிலிருந்து 74 வயதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 1500 பேர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் கலக்கப்பட்டிருக்கும் பைசெப்ஃபீனால் ஏ என்ற இரசாயன நச்சு பொருளின் காரணத்தினால் அவர்களுக்கு இதய பாதிப்புகள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக ஏற்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

விந்தணு மற்றும் கருச்சிதைவு

பைசெப்ஃபீனால் ஏ எனப்படும் இந்த இரசாயனத்தில் பல வகைகள் இருக்கின்றன இதில் டைப் 7 என சொல்லப்படும் இரசாயனத்தின் கலப்பினால், ஆண்களுக்கு விந்தணு வலுவிழப்பது மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு

வேலைக்கு செல்லும் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஏன் நாம் கடைகளில் வாங்கும் தண்ணீரும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும், பிளாஸ்டிக் பாக்கெட்களிலும் தான் அடைத்து தரப்படுகிறது. பெரும்பாலும் தினமும் பிளாஸ்டிக் பாக்கெட்கள் அல்லது பாட்டில்களில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.

பாக்டீரியா

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாகும். இது நமது வீட்டில் பிடித்து வைக்கப்படும் பாட்டில்களில் மட்டுமல்ல, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டில்களிலும் பாக்டீரியாக்கள் விரைவாக உருவாகிறது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் பருகுவதை தவிர்த்திடுங்கள்.

மட்டமான பிளாஸ்டிக்

உயர்த்தர பிளாஸ்டிக் எப்போதும் வீட்டு உபயோக பொருள்கள் தயாரிக்கவே பயன்படுத்தப்படுகின்றன. அதன் பின் இதர அலுவலக மற்றும் மற்ற உபயோகத்திற்கு அதற்கு அடுத்த இரண்டாம் தர பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகின்றன. இதன் கடைசி நிலையான மட்டமா நிலைக்கொண்ட பிளாஸ்டிக்கை கொண்டு தான் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில், இதற்கு உத்தரவாதம் தர தேவையில்லை, மற்ற அனைத்திற்கும் உத்திரவாதம் தரவேண்டும். நம் உடல்நலத்திற்கு உத்திரவாதம் அற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பெட்டிகளில் இனிமேல் உணவோ அல்லது நீரோ உட்கொள்ள வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *