தற்கொலைக்கு பலமுறை முயற்சித்தேன் பிக்பாஸில் இலங்கைப் பெண் கண்ணீர்!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த மதுமிதா கலந்து கொண்டுள்ளார். கொஞ்சும் இலங்கை தமிழில் பேசி அனைவரையும் கவர்ந்து வரும் இவர் சமீபத்தில் தான் கடந்து வந்த பாதையினை கதையாக கூறி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்தார்.

இவர் பேசுகையயில், என் பெயர் மதுமிதா ரகுநாதன், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஜெர்மனி தான். எனக்கு ஒரு அக்கா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். பேஷன் டிசைன் படிப்பதற்கு ஆசைப்பட்ட நான் அதற்காகவே மாடலிங் துறைக்கு வந்தேன்.

பின்பு அக்காவிற்கு திருமணமானதால், அவருடன் நான் ஆஸ்திரேலியாக சென்றதும், அங்கு விசா பிரச்சினையால் மீண்டும் ஜெர்மனிக்கே வந்துவிட்டேன். அங்கு தான் படித்த பேஷன்டிசைனுக்கு வாய்ப்பு குறைவு என்பதால் இன்ஜினியரிங் படித்தேன்.

தனக்கு பிடித்த படிப்பு, வாழ்க்கை கிடைக்காததால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நான் பலமுறை தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிவிட்டு கீழே இறங்கிய அவரை பிரியங்கா கட்டி அனைத்து கவலைப்படாதே என்று ஆறுதல் கூறினார். மேலும் இதனை அவதானித்த நெட்டிசன்கள், பார்வையாளர்கள் வெளிநாட்டில் பிறந்தாலும், தமிழ் இவ்வளவு அழகாக பேசியதால் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *