25 வயதில் இந்தியாவின் இளம் பெண் விமானியான காஷ்மீர் பெண்!

காஷ்மீரைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஆயிஷா அஜீஸ் என்பவர் இந்தியாவின் இளம் பெண் விமானியாகி சாதனைப் படைத்துள்ளார்.

ஆயிஷா அஜீஸ் 1995ல் காஷ்மீரில் பிறந்தார். அவரது தந்தை மும்பையில் பிறந்து வளர்ந்ததாகவும், அவரது தாயார் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தான் பின்னாளில் மகாராஷ்டிராவின் மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.

குழந்தையாக இருக்கும்போதே விமானத்தின் மீது ஆர்வம் கொண்டு உலகம் முழுவதையும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அதை தனது 25வது வயதில் சாத்தியப்படுத்தியுள்ளார்.

ஆயிஷா 2011 ஆம் ஆண்டே தனது 15 வயதில் உரிமம் பெற்ற இளைய மாணவர் விமானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டில் நாசாவில் தனது இரண்டு மாத விண்வெளி பயிற்சி வகுப்பின் போது தனது ரோல் மாடல் சுனிதா வில்லியம்ஸை சந்தித்தார். இதே ஆண்டு ரஷ்யாவின் சோகோல் விமான நிலையத்தில் ஒரு எம்ஐஜி -29 ஜெட் விமானத்தை பறக்க பயிற்சி பெற்றார் ஆயிஷா. 2017 ஆம் ஆண்டில் அவர் பம்பாய் பறக்கும் கிளப்பில் (பிஎஃப்சி) விமானப் பட்டம் பெற்றார் மற்றும் வணிக உரிமத்தைப் பெற்றார்.

ஒற்றைப்படை நேரங்கள் மற்றும் மாறும் பணிச்சூழல் இருந்தபோதிலும், சவாலை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார் ஆயிஷா. மேலும், தனித்துவமான மற்றும் சவாலான ஒன்றை எப்போதும் செய்ய விரும்புவதாக அஜீஸ் பகிர்ந்து கொண்டார்.

ANI உடன் பேசிய அஜீஸ், கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் பெண்கள் பெருமளவில் முன்னேறியுள்ளதாகவும், கல்வித்துறையில் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டதாகவும் தான் நம்புவதாகக் கூறினார். தொடர்ந்து பேசியவர்,

“சிறுவயதிலிருந்தே பயணிப்பதை நேசித்ததால் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். இந்தப் வேலையில் ஒரு பைலட் பலரைச் சந்திக்கிறார். சாதாரண 9 – 5 மணிநேர மேசை வேலை (desk job) போன்று இல்லாமல் பைலட் வேலை மிகவும் சவாலானது,” என்றார்.

புதிய இடங்களையும், பல்வேறு வகையான வானிலைகளையும் எதிர்கொள்ளவும், புதிய நபர்களைச் சந்திக்கவும் ஒரு பைலட் தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும். அதனால் தான் இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு என் தந்தை தான் ரோல்மாடல். ஆதரவளிக்கும் வகையிலான பெற்றோர்கள் எனக்குக் கிடைத்திருப்பதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *