சமந்தா விவாகரத்துக்கு பின்னர் வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்!

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து விவாகரத்து பெருவது என்பது புதிதான விஷயம் கிடையாது அதிலும் அவர்கள் விவாகரத்து பெறும் விஷயம் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத்தி ஊடகங்கள் மூலம் பெரிதாக பேசப்படும். அப்படியாக தற்போது எங்கு சென்றாலும் சமந்தா-நாக சைதன்யாவின் விவாகரத்து சம்பவங்கள் தானாம். தெலுங்கு சினிமாவில் தனித்துவமான இமேஜுடன் இருந்து வாழ்ந்து வந்தவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ. நாகேஷ்வரராவ்.

தெலுங்கில் அவர் படத்தின் மீதும் அவர் மீதும் நல்ல இடத்தினை பெற்று மரியாதையோடு வாழ்ந்து வந்தவர் அக்கினேனி. அதேசமயத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை எடுத்துக்கொண்டால் அது விவாகரத்தில் தான் முடிந்து வரும் என்ற அதிர்ச்சியும் உண்டு. நாகேஸ்வராவ் மகனன நாகர்ஜுனா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகளான லட்சுமி என்பவரை திருமணம் செய்து நாக சைதன்யாவை பெற்றெடுத்தார். பின் கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்தார். லட்சுமி விவாகரத்துக்கு பின் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து நாகர்ஜுனா நடிகை அமலாவை காதலித்து கரம்பிடித்து அகில் அக்கினேனியை பெற்றார். நாகர்ஜுனா – லட்சுமிக்கு பிறந்த நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மணம் புரிந்து இருவரும் விவாகரத்தும் பெற்றுள்ளனர். மேலும் நாகர்ஜுனா அமலா தம்பதிகளின் மகனான அகில் அக்கினேனிக்கு ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ரத்து செய்துவிட்டார்கள்.

நாகர்ஜுனாவின் சகோதரி மகனான சுமந்த்தை நடிகை கீர்த்தி ரெட்டிக்கு திருமணம் நடைபெற்று இரு ஆண்டுகளில் விவாகரத்துசெய்து கொண்டனர். சுமந்த்தின் சகோதரி சுப்ரியா இஷ்டம் படத்தில் நடித்த தெலுங்கு பட நடிகரான சரண் டோட்லா என்பவரை திருமணம் செய்தார். பின் விவாகரத்து பெற்ற பின் சரண் டோட்லா மரணமடைந்தார். இப்படி அக்கினேனி குடும்பத்தில் இருக்கும் சிலர் விவாகரத்து பிரச்சனையிலேயே குடும்பத்தை நடத்தி வருகிறார்கள் என்ற பேர் பெற்றுள்ளது அதிர்ச்சியான ஒரு செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *