மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் செலவுக்கு பணம் இல்லாததால் கணவன் செய்த செயல்!

பிரித்தானியாவில் தனது மனைவி ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றதால், செலவுக்காக தான் வேலை செய்த நிறுவனத்தில் பணத்தை திருடிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் 35 வயதான மத்தேயு டேவிஸ் (Matthew Davies) எனும் விற்பனை மேலாளரின் மனைவிக்கு, ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால், இவர்களது அன்றாட செலவு பல மடங்காக உயர்ந்துள்ளது.

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு, அவரது மனைவியால் போதுமான தாய்ப்பாலை கொடுக்க முடியவில்லை, இதனால் ஒரு நாளைக்கு 24 போத்தல் பால் கூடுதலாக தேவைப்பட்டது. மேலும் அவர்கள் வாரத்திற்கு 140 நாப்கின்களை வாங்கவேண்டி இருந்தது.

அதுமட்டுமின்றி, இந்த தம்பதியினருக்கு முந்தைய உறவுகளிலிருந்தும் குழந்தைகள் உள்ளன, எனவே அவர்களுக்கும் சேர்த்து உணவளிக்க முடியாமல், எதுவும் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு, அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு சிரமப்பட்டுள்ளார் மத்தேயு டேவிஸ்.

விற்பனை மேலாளராக பணியாற்றிவந்த மத்தேயு டேவிஸால் செலவுகளை சமாளிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் தான வலை பார்த்துவந்த நிறுவனத்திற்கு தெரியாமல், கிரேட்டர் மான்செஸ்டரின் ஸ்டாக் போர்ட்டில் உள்ள Dace Motor Group நிறுவனத்தில் விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றார்.

அந்த நிறுவனத்தில் யாருக்கும் தெரியாமால் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை விற்று கிட்டத்தட்ட 30,000 பவுண்டுகல் வரை மோசடி செய்துள்ளார். ஒரு BMW காரை விற்கும்போது அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோல் 90,000 பவுண்டுகளுக்கு மோசடி செய்ததாக Dace நிறுவனம் கூறியது. ஆனால், டேவிஸ் அந்த பணத்தின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே (30,000 பவுண்டு) எடுத்துக்கொண்டதாகவும், அதன் பின்னர் 23,000 பவுண்டுகளை திருப்பிச் செலுத்தியதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, டேவிஸ் அந்நிறுவனத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார், ஆனால் அவர் திருடிய வாகனங்களை அடையாளம் காண சக ஊழியர்களுக்கு உதவினார்.

அவர் மீது பதியப்பட்ட வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த 18 மாதங்களாக இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், மேலும் தனது முந்தைய நிறுவனத்திற்கு நேர்மையற்று நடந்துகொண்டதையும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு 10 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *