பாம்பினால் மாமியாரை கொலை செய்த மருமகள்!

இந்தியாவில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பாக நடக்கிறது. ஆனால், பாம்பை திட்டமிட்டு பயன்படுத்தி, ஆயுதமாக்கி மூதாட்டியைக் கொலை செய்ததற்கு பிணை வழங்கிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொலை செய்த மருமகளுக்கும்,   துணையாக இருந்தவருக்கும் பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவி்ட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளில், கணவன் இராணுவ வீரர் என்பதால், மனைவியை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு இராணுவப் பணிக்குச் சென்று விட்டார். திருமணம் ஆனபின்பும், மனைவி தனது முன்னாள் காதலருடன் தொடர்ந்து தொலைபேசியில் கதைத்து வந்தார்.

இது குறித்து அறிந்த வயதான மாமியார் மருமகளைக் கண்டித்துள்ளார். வீட்டில் இருக்கும் மாமனார்  அடிக்கடி வியாபார நிமித்தமாக வெளியூர் செல்வதால், மாமியாருக்கும், மருமகளுக்கும் தொடர்ந்து தகராறு நடந்துள்ளது

இந்நிலையில், தனது முன்னாள் காதலன், அவரின் நண்பர்   ஆகியோருடன் பேசி, தனது மாமியாரைக் கொல்ல மருமகள் திட்டமிட்டிருந்தார்.

இதற்காக மாமியார் தூங்கும்போது அவரின் படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை ஒரு பையில் வைத்து அதை கடிக்க வைத்து கொல்ல முடிவு செய்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் திகதி  பாம்புக் கடியால் மாமியார் உயிரிழந்தார்.மருத்துவமனைக்கு   கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவி்ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த மரணத்தில்  சந்தேகமடைந்த பொலிஸார், மருமகளின் தொலைபேசி  எண்ணை ஆய்வு செய்தனர்.

அப்போது, மாமியார் இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றது கண்டு சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் மருமகளின்  முன்னாள் காதலர், அவரின் நண்பர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொல்ல மருமகளும் அவருடன் சேர்ந்த 2 பேரும் சதி செய்தது தெரியவந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *