திமிங்கிலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய ஏழை மீனவர்!

தாய்லாந்தில் திமிங்கலம் வாந்தி எடுத்ததால் அதன் மூலம் ஏழை மீனவர் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
நரோங் பெட்சராஜ் என்ற மீனவர் கடலுக்குள் சென்றுவிட்டு கரைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நியோம் கடற்கரையில் அவர் விசித்திரமான கட்டி போன்ற ஒரு பொருளை கண்டார்.
பின்னர் தான் அது திமிங்கலம் வாந்தி எடுத்ததில் இருந்து வந்தது என்பதை உணர்ந்தார். இதை பணமாக்கலாமா என அவருக்கு சந்தேகம் வந்த நிலையில் அதை எடுத்து கொண்டு சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு சென்றார் நரோங்.
அங்கு அதை பரிசோதனை செய்த போது விலையுயர்ந்த ஆம்பர்கிரிஸ் என தெரியவந்தது. ஆம்பர்கிரிஸ் என்பது ஜீரணிக்க முடியாத பொருள் ஆகும், இது திமிங்கலங்களால் வாந்தியெடுக்கப்படுகிறது, இது கடலின் மேற்பரப்பில் திடப்படுத்தி மிதக்கிறது.
இது ஒரு கிலோவிற்கு £ 30,000 வரை விற்கப்படுவதால் இது “கடலின் புதையல்” மற்றும் “மிதக்கும் தங்கம்” என்று அழைக்கப்படுகிறது. நரோங்கிடம் இருந்த ஆம்பர்கிரிஸ் 30 கிலோ எடை கொண்டது என்பதால் அவருக்கு £1 மில்லியன் பணம் கிடைக்கவுள்ளது.
இது குறித்து நரோங் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இதுவரை யாருமே திமிங்கலம் வாந்தியில் இருந்து வரும் ஆம்பர்கிரிஸை பார்த்தது இல்லை. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், மகிழ்ச்சியில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இனி மீன் பிடிக்க செல்லமாட்டேன், அதிலிருந்து ஓய்வு பெற போகிறேன் என கூறியுள்ளார்.