இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒழித்து விட முடியும்!

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு 50% நிதி ஐசிசியிடமிருந்துதான் வருகிறது. ஐசிசிக்கு 90% வருவாய் இந்திய சந்தைகளிலிருந்து வருகிறது. ஒருவிதத்தில் இந்திய வர்த்தகங்கள்தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் ஆதரவாக இருக்கிறது என்று கூறலாம். இந்திய பிரதமர் இதை நிறுத்த நினைத்தாரேயானால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகர்ந்து விடும் என்கிறார் ரமீஸ் ராஜா
.
பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலிருந்து ஐசிசிக்கு ஒரு வருமானமும் செல்லவில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டை வலுவாக்க வேண்டும் என்பதே என்னுடைய உறுதியான திட்டம்.
ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம் கூறினார், உலகக்கோப்பை டி20-யில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபைக்கு  பிளாங்க் செக் ரெடி என்றார். எங்கள் கிரிக்கெட் பொருளாதாரம் வலுவாக இருந்தால் மற்ற வாரியங்கள் எங்களை யூஸ் அண்ட் த்ரோ போல் செய்ய முடியாது. சிறந்த கிரிக்கெட் அணியும் சிறந்த கிரிக்கெட் பொருளாதாரமும் மிகப்பெரிய சவால்.” இவ்வாறு கூறினார் ரமீஸ் ராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *