தெற்காசியாவில் 2020 ஆம் ஆண்டில் 7.1 கோடி மக்கள் வறுமையில்!

உலக வங்கி வெளியிட்டுள்ள தெற்காசிய பொருளாதாரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் 2021ல் இந்தியாவின்  பொருளாதார சரிவென்பது  குறைவுதான் என்று தெரிவித்துள்ளது.

2021 -22ல் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.3%-ஆக இருக்கும் எனவும், ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்தபோதிலும் பொருளாதார பாதிப்பு 2020-ஐ விட குறைவுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ல் கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் மேலும் 10 கோடி பேர் வறுமையின் பிடிக்கு  ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி, இந்த எண்ணிக்கையில் தெற்காசியாவில் மட்டுமே 2020-ல் 6.2 கோடியில் இருந்து 7.1 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என  தெரிவித்துள்ளது

இந்த ஆண்டிலும், தெற்காசியாவில் 4.8 கோடியிலிருந்து 5.9 கோடி மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *