சட்டவிரோத சொத்து சேகரிப்பு மேலும் 65 இலங்கையர்கள் ராஜித தெரிவிப்பு!

சட்டவிரோதமாக சொத்துகளை மறைத்து வைத்துள்ள இன்னும் அதிகமானவர்கள் பண்டோரா ஆவணங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சேனரத்ன (Rajitha Senaratne) இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தகவல்களின் படி, சுமார் 65 இலங்கையர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுவரை கசிந்த ஆவணங்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எந்தவொரு தொழிலதிபரும் எங்காவது பணத்தை வைப்பு செய்தவுடன் நாட்டின் ஜனாதிபதி எப்படி பொறுப்பேற்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் (Nirupama Rajapaksa) மற்றும் அவரின் கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *