உலகை கண்கலங்க வைத்துள்ள ஒரு கொரில்லாவின் மரணம்!

வனபாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டதன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமாகிய ந்தகாசி  என்ற கெரில்லா நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.

கொங்கோவின் விருங்கா தேசிய பூங்காவில் தன்னை சிறுவயதில் காப்பாற்றிய வனபாதுகாப்பு உத்தியோகத்தரின் கரங்களில் கெரில்லா உயிரிழந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2007 இல்வேட்டைக்காரர்கள் ந்தகாசியின் பெற்றோரை கொலை செய்தவேளை அதனை காப்பாற்றிய அன்டிரே பவுமாவின் கரங்களில் அது  உயிரிழந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது தாய் கொல்லப்பட்டதை அறியாமல் தாயை பிடித்துக்கொண்டிருந்த ந்தகாசியை அவர் காப்பாற்றியிருந்தார்.
வேறு கெரில்லாக்கள் இல்லாததால் அதனை காட்டிற்குள் விடுவது பாதுகாப்பற்ற விடயம் என தீர்மானித்த வனபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விருங்காவில் உள்ள அனாதை விலங்குகள் காப்பகத்தில்வளர்த்தனர்.

2019 இல் இன்னொரு கெரில்லாவுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து ந்தகாசி  பிரபலமாகியது.
தங்களை வளர்த்த வனபாதுகாப்பு அதிகாரி செல்பி எடுத்துக்ககொள்வதை நடித்துக்காட்ட அந்த கெரில்லாக்கள் முயன்றன என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலைகெரில்லாக்கள் உகன்டா ருவான்டா  கொங்கொவில் உள்ள வனவிலங்கு பூங்காங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
எனினும் காலநிலை மாற்றம் வேட்டைக்காரர்கள் மனித ஆக்கிரமிப்புகள் அவைகளிற்கு ஆபத்தான விடயமாக மாறியுள்ளன.

கொங்கோவில் உள்ள விருங்கா தேசிய பூங்கா உலகின் மிகவும் பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்று- கிழக்கு கொங்கோவில் காணப்படும் இந்த தேசிய பூங்கா ஆயுத மோதல்களில் சிக்குண்டுள்ளது. ஆயுதகுழுக்கள் இந்த பூங்காவில் செயற்படுவதாகவும் விலங்குகளை வேட்டையாடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெரில்லாக்களிற்கும் மனிதர்களிற்கும் இடையிலான தொடர்பினை புரிந்துகொள்வதற்கு ந்தகாசி  உதவியுள்ளது என தெரிவித்துள்ள  பவுமா ஏன் அவற்றை பாதுகாக்கவேண்டும் என்பதையும் அது உணர்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
நான் அதனை குழந்தை போல நேசித்தேன் நான் அதனுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியை கொண்டுவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *