மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

நேற்று சார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணியை 8.2 ஓவர்களில் அசால்டாக வீழ்த்தியது மும்பை அணி.

ஐபிஎல் 2021 தொடரின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா தமையிலான மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்றைய போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியத்துவமானதாகும். ஆனால் ராஜஸ்தான் தொடக்கம் முதலே மும்பை அணியிடம் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது.

ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் 50 ஓட்டங்களுக்குள் அவுட்டாகினர். தொடக்க வீரர் எவின் லூயிஸ் 24 ஓட்டங்கள் அடித்ததே அதிகப்பட்ச ஓட்டங்களாக இருந்தது.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை அணி பந்துவீச்சாளர் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் நஷீம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து, 91 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

அதிரடியாக ஆட முயற்சி செய்த ரோஹித் சர்மா 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் அதிரடியாக ஆடி வந்தார். அவர் இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ஓட்டங்களை எடுத்து மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதன்மூலம், 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பு மும்பை அணி 94 ஓட்டங்கள் எடுத்து சர்வசாதாரணமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *