சிறு வயதில் திருமணம் 8 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகையின் கணவர்!

சீரியல் நடிகர்கள் தான் இப்போது மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகங்களாக உள்ளனர். விஜய்யில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் பவானி ரெட்டி.

இந்த சீரியலை தாண்டி ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதீப் என்ற தெலுங்கு சீரியல் நடிகருடன் திருமணம் நடந்தது.

சந்தோஷமாக இருந்து வந்த அவர்கள் வாழ்க்கையில் பெரிய சோகம் ஏற்பட்டது. அதாவது திருமணமான 8 மாதத்தில் பவானி ரெட்டியின் கணவர் பிரதீப் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

அதன்பிறகு பல கஷ்டங்களை அனுபவித்த பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு இந்த நிகழ்ச்சி வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *