நவம்பர் முதல் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் ஆப் இயங்காது!

உலகளவிய மக்கள் பயன்படுத்து ஒரு செயலியான வாட்ஸ் அப் சமீப காலமாக படிப்படியாக பழைய மொபைல் போன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்திவருகிறது.

இதன்படி இந்த ஆண்டின் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், 4.0.3 அல்லது அதைவிட குறைவான இயங்குதளம் கொண்ட மொபைல் போன்களில் வாட்ஸ்அப் செயலி இயங்காது என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி 9 அல்லது அதற்கு குறைவான ஐ.ஓ.எஸ்களைக் கொண்ட ஆப்பிள் ஐ-போன்களிலும் குறிப்பாக ஐ-போன் எஸ்.இ., ஐ-போன் 6 எஸ், ஐ-போன் 6 எஸ் பிளஸ் ஆகியவற்றில் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது என அறிவித்துள்ளது.

மேலும் பயனர்களால் தங்களது மொபைல் போனின் இயங்குதளத்தை (operating system) அப்கிரேட் செய்ய முடிந்தால், அவர்களால் வாட்ஸ்அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *