வர்த்தக அமைச்சர் பதவி விலகவேண்டும் -ஓமல்பே தேரர்!

சுயநலம்மிக்க சிறிய வர்த்தகர்கள் குழுவை கூட கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தின் மீது மக்களிற்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் திறமையின்மை வெளிப்பட்டுள்ளது என எம்பிலிப்பிட்டியவில் அவர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு பொறுப்பேற்று வர்த்தக அமைச்சர் பதவி விலகவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்று காரணமாக மக்களிற்கு மிகவும் அவசரமாக உதவிதேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி வேண்டுமென்றே தனது கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் உலக நாடுகளில அரச தலைவர்களும் அமைச்சர்களும் பதவி விலகுவது வழமை அரிசி விலைகளை வர்த்தகர்கள் தீர்மானிப்பதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *