பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நுழைந்த திருநங்கை நமீதா!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோக்களின் வரிசையில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

எனினும் இந்நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்ல உள்ளனர். அந்த வகையில் தற்பொழுது சில போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

இந்த பிக் பாஸ் சீசனில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் பங்கேற்கிறார். அவர் தான் 2014 ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு வென்ற நமீதா மாரிமுத்து. இவர் ஒரு சில டிவி சீரியல்களிலும், நாடோடிகள் 2 என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் இவர் 2015 மிஸ் கூவாகம், 2018 மிஸ் இந்தியா போன்றவை வென்றவர். மேலும் இவர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான திருநங்கை உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

தெலுங்கு பிக் பாஸ் மூலம் திருநங்கைகள் கலந்துகொண்டு அமோக வரவேற்பை பெற்றது அந்த சீசன் பிக் பாஸ். தற்போது தமிழ் பிக் பாஸும் அதே பாணியை பின்பற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *