வட கொரியாவில் மிக உயர்ந்த பதவியில் கிம் ஜாங் உன்னின் சகோதரி!

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட அவரது சகோதரி கிம் கோ ஜாங்க்கு மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியா நாட்டின் அதிபராக இருந்து வரும் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un)சகோதரி கிம் யோ ஜாங் (Kim Yo Jong) தனது சகோதரனின் பிரதான ஆலோசகராக இருந்து வருகிறார்.

வடகொரியா ஆளுங்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் கிம் கோ ஜாங், அந்நாட்டின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் மிகுந்த நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில், அவருக்கு தற்போது நாட்டின் உயர்மட்ட அரசு அமைப்பில் மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அவர், வடகொரியா அரசை வழிநடத்தும் மாநில விவகார ஆணையத்தின் (State Affairs Commission) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண் கிம் கோ ஜாங் என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் மாநில விவகார ஆணையம் என்பது நாட்டை ஆளுகின்ற குழுவாகும். அண்மையில் இந்த குழுவிலிருந்து குறைந்தது 9 பேர் வயதின் காரணமாக ஓய்வுபெற்றனர் மற்றும் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து தற்போது புதிதாக 8 பேர் இந்த ஆட்சிக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரில் ஒருவராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *