இலங்கையில் இப்படியும் ஒரு அவல நிலையை சந்திக்கும் கிராம மக்கள்!

இலங்கையில் இரு கிராமங்களுக்கு இடையிலான ஆற்றினை கடந்து செல்ல கயிற்றினை பொதுமக்கள் பயன்படுத்தியவரும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றது.

பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடையிலான எல்லைக் கிராமத்து மக்கள் தினமும் பாடசாலைக்கும், வைத்தியசாலைக்கும், ஏனைய பணிகளுக்கும் செல்ல இந்த ஆற்றிற்கு நடுவே பாலம் இல்லாமல் கயிற்றினை கட்டி கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பலாங்கொடைக்கும் ஹம்பேகமுவக்கும் இடையிலான ஆற்றினை கடக்க பாலம் ஒன்றை அமைந்து தர பொதுமக்கள் சம்பந்தப்பட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்து இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் முன்னெடுக்காமல் இருக்கின்றனர்.

இதேவேளை பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட அதிகாரிகள் விரைந்து முன்னெடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *