தனது ஸ்டைலில் 6 ஓட்டங்களை அடுத்து நிறைவு செய்த தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஐதராபாத் அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் சஹா அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுக்களையும் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பதிலுக்கு 135 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இறுதியில் 3 பந்துகளுக்கு 2 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்த நிலையில் களத்தில் இருந்து எம்.எஸ் தோனி சிக்சர் அடித்து போட்டியை நிறைவு செய்தார்.

சென்னை அணி சார்பில் ருதுராஜ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களையும் டு பிளிஸ்சிஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஹோல்டர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *