கொழும்பில் உள்ள சொத்துக்கள் தொடர்பில் மாநகர மேயர் வெளியிட்ட தகவல்!

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் பதிவு செய்யப்படாத சொத்துக்களை கொழும்பு மாநகர சபை கையகப்படுத்தாது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்குள் உள்ள காணிகள் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான உண்மைக்குப் புறம்பான வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துகளுக்கான வரிப்பணத்திற்கான இலக்கம் மாநகர சபையினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டமை தவறு என்றும், அதனால் ஏற்பட்ட அளெகரியத்திற்காக நான் மன்னிப்புக் கோருகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சொத்துக்களைப் பதிவு செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாதென்றும், எந்த சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாதென்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *