இலங்கைப் பாடகியை காண இந்தியாவில் குவிந்த இலட்சக்கணக்கான ரசிகர்கள்!

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ள இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வாவை (Yohani Diloka de Silva) வரவேற்க பெருமளவு இந்திய ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இந்தியாவில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக யோஹானி அங்கு சென்றுள்ளார். இதன்போது புது டெல்லி விமான நிலையத்தில் சுமார் நான்கரை இலட்சம் ரசிகர்கள் ஒன்று கூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் மூலம் இந்திய இசை ரசிகர்கள் மத்தியில் யோஹானி பிரபல்யம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு சென்றுள்ள பாடகிக்கு மகத்தான வரவேற்று கொடுக்கப்பட்டதுடன், ரசிகர்கள் சார்பில் பணப்பரிசும் கொடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

Youtube இல் வெளியிடப்பட்ட மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் சர்வதேச ரீதியாக புகழ் அடைந்துள்ளதுடன், இதுவரையில் 133 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் சிங்கள பாடல் ஒன்று சர்வதேச ரீதியாக பிரபல்யம் அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *