இரு வாரங்களில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள்?

அடுத்த இரு வாரங்களில் கொவிட் -19 தொற்றுநோயின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறும்
அவர் கேட்டுக்கொண்டார், இது கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் என்றார்.

நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,000-5,000 இருந்த நிலையில், அது தற்போது 1,000 ஆக குறைந்துள்ளதுடன், நாளாந்த இறப்பு எண்ணிக்கையும் 50-60 ஆக குறைந்துள்ளது.
தேவை ஏற்படின் தற்போதுள்ள வழிகாட்டல்கள் மேலும் கடுமையாக்கப்படலாம் அல்லது மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது தடுப்பூசித் திட்டமானது அமுலில் உள்ள நிலையில், பொது அதன் வர்த்தக நாமத்தை பொருட்படுத்தாமல் பொது மக்கள் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *