நாளைன்றுக்கு ரூபா 1000 கோடி வருவாயா! டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்!

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டுக்கான முதல் 10 இடங்களில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் வெளியிட்டுள்ளது.
இந்திய பணக்காரர்கள் பட்டியிலில் முதல் இடத்தில் வழக்கம்போல ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ( Mukesh Ambani) உள்ளார்.

2-வது இடத்தை மற்றொரு பணக்காரர் ஆன கவுதம் அதானி (Gautam Adani) கைப்பற்றியுள்ளார். மேலும் இவர்களின் சொத்து மதிப்பு என்ன? அடுத்தடுத்த இடங்களில் யார் யார் உள்ளனர்கள் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

முகேஷ் அம்பானியின் ( Mukesh Ambani) சொத்து மதிப்பு, 7,18,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வழக்கப்போல முகேஷ் அம்பானியின் குடும்பமே இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் மற்றொரு பணக்காரர் ஆன, கவுதம் அதானியின் (Gautam Adani) சொத்து மதிப்பானது, பலமடங்கு அதிகரித்து, 5,05,900 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் தமிழநாட்டைச் சேர்ந்த ஹெச் சி எல் குடும்பத்தின் தலைவரான ஷிவ் நாடார் (Shiv Nadar) உள்ளார். இவர்களுடைய சொத்து மதிப்பு 2,36,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நான்காவது இடத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட, ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ் பி ஹிந்துஜா (S. P. Hinduja) & குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பானது 2,20,000 கோடி ரூபாயாக உள்ளது

இதேவேளை 5-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (Lakshmi Mittal) குழுமம் & குடும்பத்தினரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 1,74,400 கோடி ரூபாயாகும்.

6-வது இடத்தில் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் சைரஸ் பூனவல்லா (Cyrus S. Poonawalla) இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 1,63,000 கோடி ரூபாயாகும்.

7-வது இடத்தில் அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமனி (Radhakishan Damani) உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1,54,300 கோடி ரூபாயாகும்.

கவுதம் அதானியின், சகோதரரான வினோத் அதானி (Vinod Adani ) சொத்து மதிப்பானது மூன்று மடங்கு அதிகரித்து, 1,31,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது 8 -வது இடத்தில் உள்ளார்.

9-வது இடத்தில் ஆதித்யா பிர்லா குடும்பத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1,22,200 கோடி ரூபாயாகும்.

10-வது இந்தியா வம்சாவளியான அமெரிக்க தொழிலதிபர் ஸ்கேலர் (zscaler) நிறுவனத்தின் நிறுவனர் ஜெய் சவுத்ரி (Jai Chaudhary) இடம்பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1,21,600 கோடி ரூபாயாகும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *