தோழி மீது ஏற்பட்ட காதல் கணவன்,குழந்தையை தவிக்கவிட்டு சென்ற பெண்!

தோழி மீது ஏற்பட்ட காதலால் இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை விட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை அடுத்த பனங்காடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கும், ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், ஆண் குழந்தை ஒன்றும் 2019ம் ஆண்டு பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிலமாதங்களுக்குள் ஜெயஸ்ரீ வீட்ல் யாரிடமும் கூறாமல் மாயமாகியுள்ளார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் தேடிதலில், அவர் சென்னையில் ஒரு ஓட்டலில் இருந்ததை தெரிந்து கொண்டு அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், தனது பள்ளி தோழி துர்காதேவியுடன் வாடகை வீட்டில் வசிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் விசாரணையில், மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஜெயஸ்ரீ படித்த போது, துர்காதேவி என்ற பெண்ணுடன் நெருங்கி பழகியதோடு, இருவரும் காதலர்கள் போன்றும் இருந்துள்ளனர்.

இந்த விடயம் பெற்றோருக்கு தெரியவரவே உடனே மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பின்பு கர்ப்பமாக இருந்ததால் எங்கும் செல்ல முடியாமல் தவித்த ஜெயஸ்ரீ குழந்தையை பெற்றெடுத்த சிலமாதங்களில் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

பின்பு தோழி துர்கா தேவிக்காக சிகை அலங்காரத்தையும், உடையையும் ஆண் போல் மாற்றியதோடு, அவருடன் குடித்தனமும் நடத்தி வருகின்றார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயஸ்ரீ தனது தோழியுடன் வசிக்க விரும்புகிறேன். கணவர், குழந்தையுடனோ, பெற்றோருடனோ செல்ல விரும்பவில்லை. தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கூறியதால், அவரும் உரிய வயதை அடைந்தவர் என்பதால் நீதிமன்றம் ஜெயஸ்ரீக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

உறவினர்கள் எவ்வளவோ கெஞ்சியும், தனது குழந்தையின் முகத்தை பார்த்தும் மனம் இறங்காத ஜெயஸ்ரீ இறுதியில் தனது தோழியுடன் சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *