ட்ரம்பின் கவனத்தை திசை திருப்ப பெண்ணை அழைத்து சென்ற புடின்!

ஜப்பானில் டைபெற்ற  உச்சி மாநாட்டில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் (donald trump)  கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் (vladimir putin) இளம்பெண் ஒருவரை அழைத்து வந்த சம்பவம் தொடர்பிலான் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் முன்னால் வெள்ளை மாளிகை செயலரான Stephanie Grisham தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியதாவது,

“ஜப்பானில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற ரக்ஷ்ய அதிபர் புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழி பெயர்ப்பாளராக அழைத்து வந்ததார். அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணை அழைத்து வந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெண் Daria Boyarskaya என தெரியவந்துள்ளது. எனினும் இந்த விஷத்தை புடினுடைய செய்தி தொடர்பாளர் Dmitry Peskov மறுத்து விட்டார்.

அத்துடன் புடினுடைய மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுப்பது வெளியுறவு அமைச்சகம் தான் என்று கூறினார். இதனால் அதற்கும் புடினுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமாலாது புடின் அதிலெல்லாம் தலையிடுவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *