கள்ளக் காதலியின் நிர்வாண படங்களை கணவருக்கு அனுப்பிய மாணவன்!

பேஸ்புக் காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்கள் வழியாக அவரது கணவருக்கு அனுப்பிய பல்கலைகழக மருத்துவபீட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ரூ. 200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இரத்மலானையில் வசிக்கும் மருத்துவபீட மூன்றாம் ஆண்டு மாணவரே பிணையில் விடுவிக்கப்பட்டார். அக்மீமனவில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே முறைப்பாடளித்தார்.

திருமணமான அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். அந்த பெண்ணிற்கும், பல்கலைக்கழக மாணவனிற்குமிடையில் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டு, காதலாகியுள்ளது. இருவரும் பலமுறை நேரில் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். அத்துடன், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் நிர்வாணமாக தோன்றியுள்ளனர். இதன்போது, இளம்பெண்ணின் நிர்வாண காட்சிகளை பல்கலைகழக மாணவன் பதிவு செய்துள்ளார்.

சில காலத்தில் இருவருக்குமிடையில் முரண்பாடு தோன்றியதையடுத்து, பேஸ்புக் காதலனுடனான தொடர்பை அந்த பெண் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து, கோபமடைந்த மாணவன், அந்தப் பெண்ணின் நிர்வாணப்படங்களை அவரது கணவனிற்கும், சகோதரிக்கும் சமூக ஊடகங்கள் வழியாக அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் குடும்ப வாழ்க்கை குலைந்தது.

சந்தேகநபரை நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *