அரசாங்கத்தின்  முடிவுகள்  மற்றுமொரு  கொவிட் -19  அலைக்கு  வழிவகுக்கும்!

நாட்டை மீண்டும் திறக்கும் போது அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் மற்றுமொரு கொவிட் -19 அலைக்கு வழிவகுக்கும் என இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகிறது என அச்சங்கத்தின் பிரதி பிரதம செயலாளரான சமிந்த பெரேரா தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அது சுற்றுலா துறையின் வீழ்ச்சியால் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது பங்காளிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக சீனி மற்றும் பூண்டு மோசடியில் ஈடுபடுவதுடன், வரி குறைப்பின் மூலம் அதன் வருமான ஆதாரங்களை இழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தனது அனைத்து வருமான ஆதாரங்களையும் இழந்து, சுற்றுலாத் துறையை மாத்திரம் மேம்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிக்கிறது.
ஏறக்குறைய இரண்டு மாதங்களாக பொதுமக்கள் பல தியாகங்களைச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் முடிவுகளால் நாடு மற்றுமொரு நெருக்கடிக்கு தள்ளப்படலாம்.

மற்றுமொரு முடக்கலுக்கு வழிவகுக்கும் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *