நடிகர் பவர்ஸ்டார் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் லத்திகா என்ற படம் மூலமாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது.

ஆனாலும், அந்த கலாய்களை எல்லாம் பிளஸ்சாக மாற்றிய பவர் ஸ்டார், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார். நடிகர் சந்தான நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் வெற்றியின் மூலம் பவர்ஸ்டார் மேலும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தந்தது.

அதைத்தொடர்ந்து, கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.

இதையடுத்து, வனிதா விஜயகுமாருக்கு ஜோடியாக, ‘பிக்கப் டிராப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு தலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *