உலகையே திரும்பி பார்க்க வைத்த இளவரசி ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன அரச குடும்பம்!

காதலுக்கு கண் இல்லை என கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதையெல்லாம் தகர்த்தும் வகையில், நிஜத்தில் காதல் தான் முக்கியம் நிரூபித்துள்ளார் ஜப்பான் இளவரசி.

ஜப்பான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மேக்கோ 29 (Mako). இளவரசியான இவர், ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹித்தோவின் (Naruhito) மருமகள். இதனையடுத்து, இவர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடன் படித்து வந்த கொமுரோ (Kei Komuro) என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனிடையே, இருவரும் திருமணப் பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். ஆனால் ஜப்பான் நாட்டு வழக்கப்படி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அதன்பிறகு அவர் அரசு குடும்பத்தில் இருக்க முடியாது.

திருமணம் செய்து கொண்ட பின்னர் அரச குடும்பத்திலிருந்து விலகி விட வேண்டும். இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு ஆடம்பரமாக வாழ ஒரு பெரிய தொகையை அரச குடும்பம் வழங்கும்.

அந்த வகையில் இளைஞர் கொமுரோவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த இளவரசி மேக்கோ, அரச குடும்பத்தை விட்டு விலக முடிவு செய்தார். இதனால், அரச குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இளவரசி மேக்கோவுக்கு சுமார் 95 கோடி ரூபாய் கொடுக்க அரச குடும்பம் முடிவு செய்தது. ஆனால் அந்த பணம் தனக்கு வேண்டாம் என இளவரசி மேக்கோ முடிவு செய்துள்ளார். இது அரச குடும்பத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அரச குடும்ப சலுகை எதுவும் இல்லாமல் எப்படி வாழப் போகிறாய் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் தனது காதலனை விரைவாக கரம் படிக்க வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளார்.

அடுத்த மாதம் அவர்களுக்குத் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்ட போது சன்மானத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்தது இல்லை என்பது தான் இதில் சுவாரசியம்.

இளவரசி மேக்கோ எடுத்துள்ள முடிவு அரச குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அடுத்து என்ன செய்யலாம் அரச குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *