விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகர் கோமாவில்!

விநாயகர் சதுர்த்தி அன்று பைக் விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் இன்னும் கோமாவில் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி மகனான நடிகர் சாய் தரம் தேஜ் விநாயகர் சதுர்த்தி அன்று தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

பைக் ஸ்கிட்டாகி கீழே விழுந்த சாய் தரம் தேஜ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து சாலையில் கிடந்த சாய் தரம் தேஜுக்கு அந்த வழியாக சென்ற யாரும் உதவி செய்யவில்லை.

ஷாப்பிங் மாலில் வேலை செய்த அப்துல் என்பவர் தான் உதவினார். சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். இந்நிலையில் சாய் தரம் தேஜின் நிலைமை குறித்து அவரின் மாமாவும், நடிகருமான பவன் கல்யாண் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *