ஜெர்மனியில் 16 வருடங்கள் ஆட்சி செய்த பலம் பொருந்திய கட்சி தோல்வி!

ஜேர்மனியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 16 வருடங்கள் ஆட்சியை கையில் வைத்திருந்த பலம் பொருந்திய பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சி (Christian Democratic Union) தோல்வியடைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறித்த பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியினர் (Germany’s center-left Social Democrats (SPD)) வெற்றியைப் பெற்றுள்ளனர்.

2005 முதல் ஏஞ்சலா மெர்க்கலின் (Angela Merkel) கீழ் 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.

மெர்க்கலின் CDU/CSU பழமைவாதக் கூட்டணிக்கு 24.5% வாக்குகள் கிடைத்து 194 இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்திய – இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி (SPD) 26.0% வாக்குகளைப் பெற்று 205 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும், பசுமை அரசியல் காட்சிகள் என்று சொல்லக்கூடிய Alliance 90/The Greens கூட்டணி காட்சிகள் 116 இடங்கள், FDP 91 இடங்கள், AFD 84 இடங்கள், The Left கட்சி 39 இடங்கள் மற்றும் இதர காட்சிகள் 1 இடத்தையம் கைப்பற்றின.

SDP கட்சி கடந்த 2017 பொதுத்தேர்தலில் போது, 20.5% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *