சாதனைப் படைத்தார் விராட் கோலி!

விராட் கோஹ்லி டி20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) விளையாட்டின் போது டி-20 கிரிக்கெட்டில், 10,000 ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

கோஹ்லி டி-20 போட்டிகளில் இதுவரை 314 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் அவர் மொத்தம் 10,038 ஓட்டங்களை எடுத்து, 41.65 சராசரியாகக் கொண்டுள்ளார்.

இதில் 3,159 ஓட்டங்கள் இந்தியாவுக்காக விளையாடியபோது எடுத்தது. அவர் இதுவரை டி-20 போட்டிகளில் மட்டும் 5 சதங்களை அடித்துள்ளார், அனைத்தும் ஆர்சிபிக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி இந்த மைல்கல்லை எட்டிய உலகின் ஐந்தாவது வீரர் ஆனார். கிறிஸ் கெய்ல் (14,275 ஓட்டங்கள்), கீரான் பொல்லார்ட் (11,195), சோயிப் மாலிக் (10,808 ஓட்டங்கள்) மற்றும் டேவிட் வார்னர் (10,019 ஓட்டங்கள்) போன்ற பட்டியலில் கோஹ்லி இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *