ஆப்கானில் ஆண்கள் ஷேவ் செய்ய தடை விதித்துள்ள தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மண்டில் உள்ள தலிபான்கள், முடி திருத்தும் கடைகளுக்கு ஆண்களின் தாடியை ஷேவ் செய்ய மற்றும் மாகாணத்தில் இசைக்கு தடை விதித்துள்ளன.

ஹெல்மண்ட் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநர் Hafez Rashid Helmandi இந்த தடை உத்தரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஹெல்மண்ட் மாகாண தலைநகர் Lashkar Gah-வில் முடி திருத்தும் கடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவெடுக்கப்பட்டதாக Hafez Rashid Helmandi கூறினார்.

இந்த தடை உத்தரவு ஹெல்மண்ட் மாகாணத்தில் மட்டுமின்றி ஆப்கானிஸ்தான் முழுவதும் அமுல்படுத்தப்படும் என Hafez Rashid Helmandi குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1995-2001ம் ஆண்டுக்குப்பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அந்த காலகட்டத்தில் என்ன மாதிரியான உரிமைகள் மறுக்கப்பட்டதோ அதேநிலைதான் இந்த முறையும் நீடிக்கிறது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஷாரியத் சட்டப்படியே ஆட்சி நடக்கும் என தெரிவித்த தலிபான்கள், நாங்கள் முன்பு போல் இல்லை மாறிவிட்டோம் என கூறினார். ஆனால், அடுத்தடுத்து தலிபான்கள் நடவடிக்கை மாறாகவே அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *