பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு திட்டமிட்டு செய்யப்பட்டது!

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் நாட்டின் போக்குவரத்து பிரித்தானியர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளார்.

லொறி ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் புகாரளித்தால், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள்களை கொண்டுசொல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக நாட்டில் பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது, பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் SKY News-க்கு பேட்டியளித்த பிரித்தானியா போக்குவரத்துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ், பெட்ரோல் வாங்கும் போது வழக்கம் போல இயல்பாக நடந்து கொள்ளுமாறு பிரித்தானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நிறைய எரிபொருள் உள்ளது, நாட்டிற்குள் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை. எனவே மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்கள் இயல்பாக நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் தங்கள் கார்களில் வழக்கமாக பெட்ரோல் போடுவது போல் போட்டால் வரிசைகள் இருக்காது, பெட்ரோல் நிலையங்களிலும் பற்றாக்குறை இருக்காது.

எரிபொருள் தொடர்பான பீதி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சூழ்நிலை, இதற்கு hauliers சங்கம் தான் காரணம் என ஷப்ஸ் குற்றம்சாட்டினார்.

அவர்கள் பிரித்தானியர்களின் சம்பளத்தை குறைக்க, அதிகமான ஐரோப்பிய ஓட்டுநர்களைக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள் என கிராண்ட் ஷாப்ஸ் கூறினார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *