பஞ்சாப் அணி திகில் வெற்றி படுதோல்வியில் வெளியேறும் ஹைதராபாத் அணி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

ஐபிஎல் 2021 தொடரில், நேற்று (செப.25) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்களில் இரண்டாவது போட்டியாக ஷார்ஜாவில், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடின.

இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால், சேஸிங் செய்த ஹைதராபாத் மிக மோசமாக விளையாடியதால் தோல்வியே மிஞ்சியது.

இன்று நடைபெற்ற போட்டியில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத் அணியுடன் பஞ்சாப் மோதியது. இந்த தொடரில், ஹைதராபாத் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் தான் வென்றுள்ளது.

இந்நிலையில், இன்று டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் உயிர்நாடியே லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வாலின் அதிரடி பேட்டிங் தான். ஆனால், இன்று இருவரும் மிக விரைவில் அவுட்டானார்கள்.

மாயங்க் 5 ஓட்டங்களில் மற்றும் லோகேஷ் ராகுல் 21 ஓட்டங்களிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில், 14 ஓட்டங்களில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார்.

பிறகு நிகோலஸ் பூரன் சிக்ஸ் அடுத்து சிறப்பாக இன்னிங்ஸை தொடங்கினாலும் 8 ஓட்டங்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதன் பிறகு கடைசி நம்பிக்கையாக இருந்த தீபக் ஹூடா, 13 ஓட்டங்களில் அவுட்டாக இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. டோட்டல் பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் ஃபெயிலியர் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில், முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினார். ஷமி ஓவரில் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேறினார். கடந்த போட்டியிலும் முதல் ஓவரிலேயே வெளியான வார்னர், இந்த போட்டியிலும் முதல் ஓவரில் அவுட்டாகி அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் போல்டாகி அதிர்ச்சி கொடுக்க, மனீஷ் பாண்டே 13 ஓட்டங்களில் ரவி பிஷ்னாய் ஓவரில் போல்டானார். பிறகு கேதர் ஜாதவ்வும் 12 ஓட்டங்களில் பிஷ்னாய் போல்டாக, ஹைதராபாத்தின் நிலைமை படுமோசமானது.

6 பந்துகளில் 17 ஓட்டங்கள் அடுத்த சில நிமிடங்களில் அப்துல் சமத் வெறும் 1 ரன்னில் பிஷ்னாய் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 75 எனும் இக்கட்டான நிலைக்குச் சென்றது சன் ரைசர்ஸ்.

இதன் ஜேஸன் ஹோல்டர் அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாசி, போட்டியை உயிர்ப்புடன் வைத்திருந்தார். மெல்ல மெல்ல அவர் சாகாவுடன் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்துகொண்டிருந்த போது, தேவையே இல்லாமல் ரிதிமான் சாஹா 31 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பிறகு, ரஷீத் கான் 3 ஓட்டங்களில் அவுட்டாக, சன் ரைசர்ஸ் 7வது விக்கெட்டை இழந்தது. பிறகு 19வது ஓவரில், அர்ஷதீப் அட்டகாசமாக வீசி வெறும் நான்கு ஓட்டங்களே கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

இதில், கடைசி ஓவரை நாதன் எல்லிஸ் வீச, அந்த ஓவரில் 11 ஓட்டங்களே சன் ரைஸர்ஸ் அணியால் எடுக்க முடிந்தது. இதனால், பஞ்சாப் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கடைசி ஓவரில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த பஞ்சாப், இந்த போட்டியில் ஒருவழியாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஜேஸன் ஹோல்டர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். முடிவில் சன் ரைசர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்கள் மட்டும் எடுத்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், 9வது போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் 8வது தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

இதனால், அந்த அணி ஐபிஎல் 2021 தொடரில் இருந்து வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இனி வரும் 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றால் கூட, ஏதாவது அதிசயம் நிகழ்ந்ததால் தான், பிளே ஆஃப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு.

அதேசமயம், 10-வது போட்டியில் விளையாடிய பஞ்சாப் 4-வது வெற்றியை பதிவு செய்து, புள்ளிப்பட்டியலில் அந்த அணி 5-வது இடத்திற்கு முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *