கடத்தல்காரர்களை கொலை செய்து நகரின் மத்தியில் உடல்களை தொங்கவிட்ட தலிபான்கள்!

ஹேரத் நகரில் நான்கு கடத்தல்காரர்களை கொலை செய்து அவர்களின் உடல்களை பொதுமக்களின் பார்வைக்காக தொங்கவிட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

வர்த்தகர் ஒருவரையும் அவரது மகனையும் கடத்த முயன்ற கடத்தல்காரர்களுடனான துப்பாக்கி மோதலின் பின்னர் அவர்களை கொலை செய்து பொது இடத்தில் உடல்களை தொங்கவிட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

கிரேனை பயன்படுத்தி நகரின் மத்தியில் உள்ள பகுதியில் தலிபான்கள் உடல்களை தொங்கவிட்டுள்ளனர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் மத்திய பகுதிக்கு நான்கு உடல்களை தலிபான்கள் கொண்டுவந்தனர், ஒன்றை அங்கு தொங்கவிட்ட பின்னர் ஏனையவற்றை வேறுபகுதிக்கு கொண்டுசென்றனர் என அந்த பகுதியை சேர்ந்த வசீர் அகமட் செடிக்கி என்ற சிறிய வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் கடத்தல்களை தடுப்பதற்காகவே உடல்கள் தொங்கவிடப்பட்டன என உள்ளுர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்டனர் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தலிபான் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் இது குறித்த படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *