மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவராம்! பிரபல நடிகை வெளியிட்ட பதிவு!

கவர்ச்சியால் 80, 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் கொடிக்கட்டி பறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவரின் கவர்ச்சியாலும், அசத்தலான நடிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர்.

இவரது நடிப்பை பாராட்டாதவர்களே கிடையாது. திரையுலகில் பெரும் பிரபலமாக இருந்த அவர் சில மன உளைச்சலால் திடீரென தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.
இவரது நினைவுளான செப்டம்பர் 23 ஆம் நாள் அன்று நடிகை ராதா உருக்கமாக வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர், என் முதல் படத்தில் என்னுடைய அண்ணி கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார்.

எனக்கு மட்டுமே நன்றாக தெரியும் அவர் கிளாமர் காட்சிகளை எவ்வளவு எளிதாக நடிப்பாரோ அதே அளவிற்கு எமோஷனல் காட்சிகளையும் அசால்டாக நடிக்கக் கூடியவர்.

இத்தகைய திறமையான நடிகையை சிறுவயதிலேயே இழந்தது வேதனை அளிக்கிறது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *