மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி!

மும்பை இந்தியன் அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2021 தொடரின் 34-வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலமாக அமைந்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி-காக் களமிறங்கினார்கள். நிதானமாக விளையாடிய இந்த ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

மும்பை அணி 78 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 33 ஓட்டங்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ஓட்டத்தில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் டி-காக் 55 ஓட்டங்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இவர்கள் இருவரையும் அடுத்தடுத்து பிரசித் கிருஷ்ணா அவுட்டாக்கி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தார். மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பயிதால் அந்த ஸ்கொர் எடுக்க தடுமாறியது.

இஷான் கிஷான் (14), பொல்லார்டு (21), குர்ணால் பாண்டியா (12) ஓட்டங்களில் அவுட்டாகினர். ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய மும்பை இறுதி ஓவர்களில் ஒட்டங்கள் குவிக்க திணறியது.

இதனால் 20 ஒவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணி 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் சுப்மன் கில் 13 ஓட்டங்களில் பும்ரா பந்துவீச்சில் சிக்கி அவுட்டானார்.

அவரை தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் பட்டையை கிளப்பினார்கள்.

சிக்சருகளும், பவுண்டரிகளுமாக விளாசிய இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணியின் பவுலர்கள் திணறினர்.

வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா ரன்ரேட் அடிப்படையில் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *