கொரோனா வைரஸ் இன்னும் ஓராண்டில் முடிவுக்கு வரலாம்!

கொரோனா பெருந்தொற்று இன்னும் ஓராண்டில் நிறைவுக்கு வரலாம் என்று கோவிட்-19 தடுப்புமருந்து நிறுவனமான மாடர்னாவின் CEO தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லந்தின் Neue Zuercher Zeitung ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், மாடர்னா மருந்து நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெஃபான் பன்செல் (Stephane Bancel) அதனைக் கூறினார்.

அவர் இது குறித்து கூறியதாவது; “கடந்த 6 மாதங்களில் தடுப்புமருந்தின் உற்பத்தி ஆற்றல் விரிவுபடுத்தப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் உலகில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவில் தடுப்புமருந்து தயாராக இருக்கலாம்.
Booster தடுப்பூசிகளுக்கும் போதிய அளவில் ஏற்பாடு செய்யப்படலாம்” என்று பன்செல் கூறினார்.

அதேபோல், குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுவது கூடிய விரைவில் சாத்தியமாகலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் “டெல்டா வகைக் கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் நாளடைவில் இயற்கையாகவே எதிர்ப்பாற்றலைக் கொண்டிருப்பர் ” என்று பன்செல் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *