உலக புகழ் இலங்கைப் பாடகி யொஹானியை பாராளுமன்றத்தில் கெளரவிக்க கோரிக்கை!

யொஹானி மற்றும் சதீசன் ஆகியோர் ‘மெணிகே மகே ஹிதே’ என்ற பாடலின் மூலம் இலங்கைக்கு வழங்கிய கெளரவத்துக்காக இலங்கையின் நாடாளுமன்றம், அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹா (Nalin Bandara Jayamaha) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை பாடல் ஒன்று, உலக அளவில் முதல் 10 இடத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யோஹானியின் பாடல் பெரும் வெற்றி பெற்ற பிறகு இந்தியாவும் அவரை அங்கீகரித்துள்ளதாக நளின் பண்டார கூறியுள்ளார்.

யோகானி மற்றும் சதீஷனின் சாதனையை இலங்கை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். யோஹானி மற்றும் சதீஷனின் “மெணிகே மகே ஹிதே” உலகளாவிய தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளது.

இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இந்த இலங்கை பாடல் 7 வது இடத்தில் உள்ளது. அத்துடன் யொஹானி மற்றும் சதீஷனின் ‘மெணிகே மகே ஹிதே’ யூடியூபில் 119 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *