ஆப்கானின் கரப்பந்தாட்ட அணிய வீராங்கனை சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தானின் கரப்பந்தாட்ட அணியை சேர்ந்த வீராங்கனைகள் தங்கள் அணியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் தாங்கள் ஆப்கானில் தலைமறைவாக உள்ளதாகவும் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 வீராங்கனைகள் தாங்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அங்கிருந்து தப்பமுயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான்கள் தங்களை கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்காக மாகாணங்களிற்கு இடையில் மாறிமாறி பயணித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் லண்டனிற்கு தப்பிச்சென்ற வீராங்கனை ஒருவர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

தங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய வீராங்கனைகளும் கொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனது சகாக்களுடன் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ள கரப்பந்தாட்ட அணி வீரர்கள் ஒவ்வொரு இடமாக மறைந்து வாழ்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களையும் குடும்பத்தவர்களையும் பாதுகாப்பதற்காக அவர்கள் தங்கள் விளையாட்டு உபகரணங்களை எரித்துவிட்டனர் என தெரிவித்துள்ள அவர் வீராங்கனைகள் அச்சமடைந்துள்ளனர் தங்கள் விளையாட்டு தொடர்பான எதனையும் அவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வீராங்கனைகள் பலர் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களை தலிபான் ஆதரவாளர்களான அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அச்சுறுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சோபியா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆப்கானின் கரப்பந்தாட்ட அணியின் முக்கிய உறுப்பினர் அவர் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கத்திக்குத்து தாக்குதலிற்கு உள்ளான பின்னர் அங்கிருந்து அயல் நாடொன்றிற்கு வெளியேறினார் தனக்கு முன்னரே தலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர் தன்னை விளையாட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர் என அவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

நான் அங்கிருந்து வெளியேறும்வேளை எனது குடும்பத்தவர்கள் அச்சம் காரணமாக எனது விளையாட்டு உபகரணங்களை அழித்துவிட்டனர் என அவர் தெரிவித்தார்.

அவர் தனது சகாக்களுடன் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பிலிருக்கின்றார். கடந்த மாதம் எங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் விபரங்கள் தெளிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அவரை கொலை செய்தது தலிபான் என நிச்சயமாக நான் நம்புகின்றேன். அவர்கள் அவ்வேளை ஆப்கானை கைப்பற்றும் நிலையிலிருந்தனர்.அவ்வேளை வேறு எந்தக் குழுவும் அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் அவர் ஒரு வீராங்கனை மாத்திரமே அவரை கொலை செய்யுமளவிற்கு அவர் மக்களுக்கு தீங்கு இழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *