பிரித்தானிய கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை பெண் மருத்துவர்!

பிரித்தானியாவில் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்ப இளம் பெண் மருத்துவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Margate கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது உயிரிழந்த அந்த பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் அவர் பெயர் Thirushika Sathialingam என்பதும் 26 வயது மதிக்கத்தக்க இவர் சம்பவ தினத்தன்று தன் பெண் தோழிகளுடன் குறித்த கடற்கரைக்கு சென்றுள்ளார். ஹோட்டலுக்கு தோழிகள் திரும்பிய நிலையில், அவர் காணவில்லை.

அதன் பின் அவரை தேடிய போதே, அவர் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த Thirushika Sathialingam இலங்கையில் பிறந்தவர். கடந்த 2011-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் Kent-க்கு வருவதற்கு முன்பு, தன்னுடைய குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை Ilford-ல் கழித்துள்ளார்.

Sandwich-ல் இருக்கும் Sir Roger Manwood’s பள்ளியில் படித்த இவர், அதன் பின் Latvia-வில் இருக்கும் Riga Stradins University-யில் மருத்துவம் பயின்றார். இதையடுத்து அவர் Queen Elizabeth The Queen Mother மருத்துமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருடைய தந்தை சத்தியலிங்கம் Queen Elizabeth The Queen Mother மருத்துவமனையில் நிபுரணாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், அவர் தன்னுடைய மகள் மரணம் குறித்து மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

அதில், ஒவ்வொரு பெற்றோரு தங்கள் குழந்தை சிறந்த குழந்தை என்று நினைக்கிறோம். அதே போன்று தான் என் மகள் உண்மையிலே இருந்தாள். எனக்கு அவள் நிறைய அறிவுரைகளை வழங்கினாள். புத்திசாலி, திறமையானவள், கொரோனா நேரத்தில், மக்களையே கவனித்து வந்தாள்.

குறிப்பாக கொரோனாவின் இரண்டாவது அலையின் போது, அவள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாச வார்டில் இருந்தாள். அங்கு அவர்களுடன் உட்கார்ந்து பேசுவாள், அவர்களுக்கு ஆறுதலாக கைகளை பிடித்துக் கொள்வாள்.

அவள் வேலையில் ஆர்வமாக இருந்தாள் என்று குறிப்பிட்டார். Thirushika Sathialingam மருத்துவ படிப்பில் இருந்த போது, Peter Speilbichler என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் ஒன்றாக ஆறு ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அவர் கூறுகையில், அவள் எப்போதும் கனிவாகவும், புன்னகையுடனுமே இருப்பாள். எவ்வளவு கோபமாக இருந்தாலும், நான் அவளிடம் இருந்து எந்த ஒரு கேட்ட வார்த்தை கூட கேட்டதில்லை. நாங்கள் இருவரும் அந்தளவிற்கு நேசித்தோம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், Thirushika Sathialingam-ன் சகோதரர் Queen Elizabeth The Queen Mother மருத்துவமனையில் ஜுனியர் மருத்துவராக உள்ளார். அவர், தன் சகோதரியை, ஒரு அற்புதமான மருத்துவர், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்ததாக கூறியுள்ளார்.

Thirushika Sathialingam-வின் இறுதிச்சடங்கு நேற்று Margate Crematorium-வில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *