கொரோனா காலப்போக்கில் வெறும் ஜலதோஷமாக மாறிப்போகும்!

கொரோனாவும் காலப்போக்கில் வெறும் ஜலதோஷத்தை உருவாக்கும் ஒரு வைரஸாக மாறிப்போகும் என்கிறார், ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய அறிவியலாளர்.

ஆக்ஸ்போர்டு நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியரான பேராசிரியர் Dame Sarah Gilbert, இனி கொரோனா வைரஸ் பயங்கரமான ஒரு திடீர் மாற்றம் பெற்ற வைரஸாக மாறாது என்றும், அது காலப்போக்கில் ஒரு சாதாரண ஜலதோஷ வைரஸாக மாறிவிடும் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாகவே வைரஸ்கள் மக்களுக்குள் பரவும்போது தன் வீரியத்தன்மையை இழந்துவிடும் என்று கூறும் பேராசிரியர் Sarah, இன்னும் பயங்கரமான ஒரு வகை Sars-CoV-2′ வைரஸ் உருவாகும் என எண்ணவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.

Covid-19ஐ உருவாக்கும் இந்த கொரோனா வைரஸ், காலப்போக்கில் ஜலதோஷத்தை உருவாக்கும் ஒரு சாதாரண கொரோனா வைரஸாக மாறிவிடும் என்கிறார் அவர்.
நாம் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் நான்கு வெவ்வேறு வகை கொரோனா வைரஸ்களுடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் பேராசிரியர் Sarah, இந்த Sars-CoV-2 வைரஸும் அவைகளில் ஒன்றைப் போலாகிவிடும் என்பதை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை என்கிறார்.

ஒரே விடயம் ,அது ஜலதோஷ வைரஸாக மாறுவதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதுதான் என்று கூறும் பேராசிரியர் Sarah, அதுவரை இந்த கொரோனாவை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறார்.

59 வயதாகும் பேராசிரியர் Sarah, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Jenner நிறுவனத்தில், கொரோனாவுக்கெதிரான ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கிய குழுவை தலைமையேற்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *